×
Saravana Stores

கடல் வளத்தை பாதுகாக்க காமன்வெல்த் பிரகடனம்

ஆபியா: தென்பசிபிக் தீவு நாடான சமோவாவில் உள்ள அபியாவில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் 2 நாள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ஆபியா பெருங்கடல் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. அதில், கடுமையான காலநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் அதிகப்படியான சுரண்டல் ஆகியவற்றை எதிர்கொண்டு கடல் வளத்தை பாதுகாக்க 56 உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாட்டில் கானா நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷைர்லி அயோர்கோரர் போட்ச்வே காமன்வெல்த் அமைப்பின் புதிய பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார். வரும் 2026ல் ஆன்டிகுவா மற்றும் பார்படோஸில் அடுத்த காமன்வெல்த் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

The post கடல் வளத்தை பாதுகாக்க காமன்வெல்த் பிரகடனம் appeared first on Dinakaran.

Tags : APIA ,COMMONWEALTH NATIONS ,ABIYA ,SOUTH PACIFIC ISLAND NATION OF ,SAMOA ,Dinakaran ,
× RELATED ஆப்கான் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்ய கூடாது: தலிபான் புதிய தடை