மதுரை: மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை – 2024 முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் கனமழை குறித்த தகவல்கள், வானிலை முன்னெச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு TN- Alert என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.
இந்த செயலியினை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பருவநிலை தொடர்பான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் அறிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பேரிடர் காலங்களில் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க கீழ்காணும் உதவி எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா கேட்டுக்கொள்கிறார்.
* மாநில கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா (Toll Free): 1070
* மாவட்ட கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா (Toll Free): 1077
* மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை: 0452-2546161, Whatsapp No: 9655066404
The post மதுரை மழை, பேரிடர் காலங்களில் புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம் appeared first on Dinakaran.