×
Saravana Stores

மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து காணொளிக் காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை, தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தல். சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு மழைத்தொடர்பாக மதுரை மக்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஆலோசனை நடத்தினார்.

மதுரையில் இன்று கனமழை பெய்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அங்கு நிலவும் சூழல் மற்றும் அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிய, காணொளிக் காட்சி வாயிலான ஆய்வுக்கூட்டத்தை சற்று நேரம் முன் நடத்தினார்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மை செயலாளர் – மதுரை மாவட்ட ஆட்சியர் – மதுரை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் முழுமையாக வடிந்துவிட்டது என்று கூறிய அதிகாரிகள், தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தனர்.

தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை, தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், உணவு – தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்

மேலும், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு மழைத்தொடர்பாக மதுரை மக்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஆலோசனைகளை வழங்கினார்

 

The post மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Madura ,Chennai ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,
× RELATED மதுரையில் போர்க்கால அடிப்படையில் மழை...