×

சமயபுரத்தில் மத்திய மண்டல பால் முகவர்கள் சங்க கூட்டம்

திருச்சி, அக். 26: மத்திய மண்டல பால் முகவர்கள் சங்க கூட்டமும், 6ம் ஆண்டு தீபாவளி பரிசளிப்பு விழாவும் திருச்சி சமயபுரம் மீனாட்சி மஹாலில் நடைபெற்றது. பால் முகவர்கள் சங்க தலைவர் ராஜசேகரன், பால் முகவர்கள் சங்க செயலாளர் ஜே. பால் பிரின்ஸ் நோவா ஏஜெண்சி, திருச்சி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில், பால் முகவர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், G.K.Dairy (தமிழ் பால்) நிறுவனத்தின் செயல் இயக்குனர் Rtn.K.தியாகராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் பால் விநியோகத்தில் முகவர்களின் முக்கியத்துவத்தை பாராட்டி பேசினார். இவ்விழாவில், அமிர்தா பால் இயக்குனர் மோகனசுந்தரம், வேதா பால் நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் மற்றும் வைகை Dairy இயக்குனர் விக்னேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

The post சமயபுரத்தில் மத்திய மண்டல பால் முகவர்கள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Central Zone Milk ,Agents ,Association ,Samayapuram ,Trichy ,Central Zone Milk Agents Association ,annual ,Diwali prize ,Meenakshi Mahal ,Trichy Samayapuram ,Milk Agents Association ,President ,Rajasekaran ,J. Milk… ,Dinakaran ,
× RELATED ஆண்டுதோறும் 35,000 பேர் அமெரிக்காவில்...