×

பொன்னமராவதி அருகே கேசராபட்டி அரசு பள்ளியில் குடிநீர் தொட்டி திறப்பு

 

பொன்னமராவதி,அக்.26: பொன்னமராவதி அருகே கேசராபட்டி அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி கட்டிக்கொடுத்து பயன்பாட்டிற்கு திறப்பு விழா நடந்தது. பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பொன்னமராவதி லயன்ஸ் சங்கம் சார்பில் குடிநீர் தொட்டி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. இதனை லயன்ஸ் சங்கத்தலைவர் முகமதுரபீக் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து மரக்கன்று நடப்பட்டது.

பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருட்கள், தீபாவளி ஸ்வீட் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சித்தலைவர் செல்வி, லயன்ஸ் சங்க செயலாளர் முத்துக்கிருஸ்ணன், பொருளாளர் பெரியசாமி, முன்னாள் தலைவர்கள் தங்கப்பன், பழனியப்பன், வெள்ளைச்சாமி, வார்டு உறுப்பினர் மகபத்நிசா முகமது ஜரீப், அங்கன்வாடி பணியாளர்கள் கருப்பாயி, மலைச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமையாசிரியர் மீனாட்சி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பாத்திமா நன்றி கூறினார்.

The post பொன்னமராவதி அருகே கேசராபட்டி அரசு பள்ளியில் குடிநீர் தொட்டி திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kesarapatti Government School ,Ponnamaravati ,Ponnamravati Lions Sangam ,Kesarapatti Panchayat Union Primary School ,Ponnamravati ,Lions ,Dinakaran ,
× RELATED மருத்துவ காப்பீட்டு அட்டை எடுக்க சேவை மையம் அமைக்க வேண்டும்