தேனி, அக். 26: தேனியில் நேற்று மதியம் முதல் மழை கொட்டியதால் தீபாவளிக்கான வியாபாரம் பாதிப்படைந்தது. தேனி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன மேலும் அணைகள் கண்மாய்களுக்கு நீர் வரத்து ஆதாரமான ஆறுகள் கால்வாய்கள் மற்றும் ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னமும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் தேனிக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தேனி நகரில் நேற்று மதியம் முதல் மழை பெய்ய துவங்கியது. இம்மையானது நேற்று மதியம் தொடங்கி மாலை வரை நீடித்தது.
இதனால் தீபாவளி விற்பனைக்காக தேனி நகர் மதுரை சாலை பகவதி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதே போல பெரிய ஜவுளி கடைகளிலும் வியாபாரம் மந்த நிலையை அடைந்தது.
The post தேனியில் வெளுத்து வாங்கிய கனமழை: தீபாவளி வியாபாரம் பாதிப்பு appeared first on Dinakaran.