- கத்தார் விழிப்புணர்வு நடைபயணம்
- மதுரை
- காதர்
- நட
- கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம்
- மதுரை மண்டல அலுவலகம்
- மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்…
- கதர் விழிப்புணர்வு நடைபயணம்
- தின மலர்
மதுரை, அக். 26: மதுரையில் நேற்று நடைபெற்ற கதர் விழிப்புணர்வு நடைபயணத்தில், ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமும், ஒன்றிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மதுரை மண்டல அலுவலகத்தின் சார்பிலும் காதி மகா உற்சவம் அக்.2 முதல் 31ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் மற்றும் காந்திய சிந்தனைகள் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கதர் நடைபயணம் நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகில் இருந்து தொடங்கி, காந்தி அருங்காட்சியகத்தில் நிறைவு பெற்றது. இந்த நடை பயணத்தை கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா துவக்கி வைத்தார். கேவிஐசி மதுரை மண்டல இயக்குநர் செந்தில்குமார் ராமசாமி, டாக்டர் சீனிவாசன், எஸ்ஐ மயில் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலிய மாணவிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். முடிவில், காந்தி மியூசியத்தில் காதி பொருட்களை பயன்படுத்துவது குறித்து உறுதிமொழி ஏற்றனர். நிறைவு நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா பேசும்போது, ‘‘காதி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த பேரணி நடைபெறுகிறது. இந்த நிறுவனம் மூலம் கிராமப்புறங்களில் இளைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
The post கதர் விழிப்புணர்வு நடைபயணம் appeared first on Dinakaran.