- சந்திரமோகன்
- அமர்வுகள் நீதிமன்றம்
- சென்னை
- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
- சந்திரமோகன்
- மெரினா
- மெரினா லூப் ரோடு, சென்னை
- தின மலர்
சென்னை: மெரினாவில் காவல்துறையிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்குமாறு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அங்கிருந்து எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி சந்திரமோகன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், காவல்துறையினர் தன்னையும், தன் மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தன்னுடைய தோழியிடம் தவறாக நடந்து கொண்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
The post போலீசாரை அநாகரிகமாக பேசிய வழக்கு ஜாமீன் வழங்கக்கோரி சந்திரமோகன் மனு தாக்கல்: காவல்துறை பதில் தர அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.