- மண்டல அபிஷேகம்
- இராமேஸ்வரம் கோயில்
- ராமேஸ்வரம்
- மண்டலாபிஷேக்
- ராமேஸ்வரம் காவல்காரசுவாமி
- உபகோயில காவல்கரசுவாமி
- கோவில்
- ராமேஸ்வர ராமநாதசுவாமி கோவில்
- மண்டலபிஷேகம்
ராமேஸ்வரம், செப்.26: ராமேஸ்வரம் காவல்காரசுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலின் வடக்கு வாசல் அருகே உபகோயிலான காவல்காரசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு திருக்கோயில் நிதியில் ரூ.20 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த செப்.8ல் கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிறைவடைந்து 48வது நாளான நேற்று காலையில் இக்கோயில் மண்டலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று. கோயில் பூசாரி கு.வெள்ளைச்சாமி பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை வழிபாடு செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவல்கார சுவாமியின் அருளை பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் சிவராம்குமார், ஆய்வாளர்கள் பிரபாகரன் மற்றும் சிவக்குமார், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ராமேஸ்வரம் கோயிலில் மண்டலாபிஷேகம் appeared first on Dinakaran.