×

பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துனர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: வியாசர்பாடி பணிமனை, மகாகவி பாரதியார் நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் நடத்துனராக பணியாற்றிய ஜெகன் குமார், பயணி தாக்கியதில் காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த நடத்துனர் ஜெகன் குமார் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த நடத்துனர் ஜெகன்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துனர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Jagan Kumar ,Mahakavi Bharatiyar Nagar ,Koyambedu Bus Station ,Kilpakkam Government Hospital ,
× RELATED புரட்சியாளர் அம்பேத்கருக்குப்...