×

காதலையா பிரிக்கிறாய்? தியேட்டரில் பெண்ணிடம் அறை வாங்கிய நடிகர்

ஐதராபாத்: கடந்த 18ம் தேதி சமரன் இயக்கத்தில் உருவான லவ் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை சினிமா தியேட்டரில் ரசிகர்களுடன் பார்ப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு சக நடிகர்களுடன் என்டி ராமசாமியும் சென்றிருந்தார். அந்த படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதில் காதலை பிரிப்பதாக அவரது காட்சி அமைந்து இருந்தது. இந்த கதாபாத்திரத்தினால் கோபமடைந்த பெண் ஒருவர் கூட்டத்தில் இருந்து ஓடிவந்து யாரும் எதிர்பார்க்காத நிலையில் என்டிஆரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதன்பின்னரும் அந்த பெண், படத்தில் இருக்கும் கதையை குறிப்பிட்டு ஏன் அந்த ஜோடியை பிரித்தாய் என்று ஆக்ரோஷமாக கேட்டு அவரது சட்டை காலரை பிடித்து தள்ளினார். தொடர்ந்து தாக்க முற்பட்டார். இதனால் நடிகர் ராமசாமி மற்றும் உடன் இருந்த நடிகர், நடிகைகள், அந்த பெண்ணை அங்கிருந்து வெளியே அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post காதலையா பிரிக்கிறாய்? தியேட்டரில் பெண்ணிடம் அறை வாங்கிய நடிகர் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Samaran ,NT Ramasamy ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...