- Tiruppuvanam
- சிவகங்கை
- 1993 திருப்புவனம் கோவில்
- கோயில் பங்குனி தேரோட்டம்
- 1993 திருப்புவனம் கோவில் தேர் கலவரம்
சிவகங்கை: 1993ல் திருப்புவனம் கோயில் தேரோட்டத்தில் நடந்த கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை. 1993ல் கோயில் பங்குனி தேரோட்டத்தின்போது சந்தை திடலில் அனுமதி பெற்று பாட்டுக் கச்சேரி நடத்தப்பட்டது. ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அதிகளவில் கூட்டம் கூடியதாக தடுத்து நிறுத்தி விட்டதால் போலீஸ் மீது ஒரு தரப்பு ஆத்திரமடைந்தது. மறுநாள் தேரோட்டத்தின் போது போலீசிடம் மோதலில் ஈடுபட்டு தேரை சாலையில் நிறுத்தி மறியல் செய்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அடையாளம் தெரியாத 260 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். வழக்கில் சம்பந்தப்பட்ட 23 பேர் மட்டுமே உயிருடன் உள்ள நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கவில்லை எனக்கூறி விடுதலை செய்யப்பட்டனர்.
The post 1993 திருப்புவனம் கோயில் தேரோட்ட கலவர வழக்கு: 23பேர் விடுதலை appeared first on Dinakaran.