×
Saravana Stores

‘எனக்கும் அஜித்துக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்’

சென்னை: அஜித் குமாரின் 52வது பிறந்தநாளையொட்டி, அவரது முதல் தமிழ்ப் படமான ‘அமராவதி’ டிஜிட்டல் மூலம் புதுப்பிக்கப்பட்டு, நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 1993ல் செல்வா இயக்கத்தில் அஜித் குமார், நாசர், விசித்ரா, நிழல்கள் ரவி நடிப்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்த இப்படத்தில் சங்கவி அறிமுகமானார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது முதல் தமிழ்ப் படமான ‘அமராவதி’ ரீ-ரிலீசாகிறது. மே 1 உழைப்பாளர்கள் தினம். இந்த மே 1 எனக்கு மிகவும் ஸ்பெஷல். காரணம், ‘அமராவதி’. எனக்கும், அஜித் குமாருக்கும் இது முதல் படம். 1993ல் ஷூட்டிங் நடந்தது. அப்போது நான் 9ம் வகுப்பு படித்தேன். இயக்குனர் செல்வா என்னைப் பார்த்து, ‘இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு. இதையே ஹீரோயினா நடிக்க வைக்கலாம்’ என்றார். அப்போது எனக்கு தமிழ் தெரியாது. எப்படி மேக்கப் போடுவது, எப்படி கேமராவை எதிர்கொண்டு நடிப்பது என்று தெரியாது. ஷூட்டிங்கில் செல்வா அவஸ்தைப்பட்டார். மிகவும் கஷ்டப்பட்டு என்னிடம் வேலை வாங்கினார். ஒரு படத்தில் நடித்தால், படம் முடிந்த பிறகு அது ரிலீசாகும். பிறகு நிறைய படங்கள் கிடைக்கும். ஆனால், ஒரு படம் ரீ-ரிலீஸ் ஆவது என்பது ரொம்ப அரிதான விஷயம். சிலருக்குத்தான் அது அமையும். அந்த வரிசையில் ‘அமராவதி’ படமும் சேர்ந்திருப்பதை எனக்கும், அஜித்துக்கும் கிடைத்த அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.

The post ‘எனக்கும் அஜித்துக்கும் கிடைத்த அதிர்ஷ்டம்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : chennai ,ajit kumar ,Chosha Bonnurangam ,Nasser ,Visitra ,Shadows Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED துபாயில் Porsche GT3 காரை டெஸ்ட் டிரைவ் செய்த அஜித்குமார்! #AK #Ajith #CarRace #porsche