- கோயம்புத்தூர் ரயில் நிலையம்
- கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை
- கோயம்புத்தூர்
- தேவ் ஆனந்த்
- ஒடிசா
- வாலயர், கோயம்புத்தூர்
- தின மலர்
*உடல் கருகிய நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி
கோவை : ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தேவ் ஆனந்த் (27). இவர் கோவை மாவட்டம் வாளையாரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கூலித் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை தேவ் ஆனந்த் கோவை ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயில் நிலையத்தில் உள்ள முதல் பிளாட்பார்ம் அருகே பயணிகள் ஓய்வு எடுக்கும் அறை உள்ளது. அந்த அறையின் மீது ஏறிய தேவ் ஆனந்த், 2ம் பிளாட்பார்மின் மேற்கூரையில் இறங்கினார். அப்போது அங்கு கோவை-நாகர்கோவில் ரயில் நின்றுகொண்டு இருந்தது.
அந்த ரயில் பெட்டி மீது குதித்து ஏறிய தேவ் ஆனந்த் ரயில் தண்டவாளத்திற்கு மேலே செல்லும் 25 ஆயிரம் வாட்ஸ் மின்கம்பியை பிடிக்க முற்பட்டுள்ளார். அதற்குள் எர்த் அடித்து தேவ் ஆனந்த் தூக்கி வீசப்பட்டார். தேவ் ஆனந்தின் உடல் முழுவதும் கருகியது.
இதனை கண்ட ரயில்வே துறை போலீசார் தேவ் ஆனந்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தேவ் ஆனந்திற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தேவ் ஆனந்த் எதற்காக ரயில் நிலையம் வந்தார்? தற்கொலை முயற்சியா? என ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் இன்ஜினில் ஏறிய வாலிபர்
கோவை ரயில் நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக ஹரிஹரன் (28) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் மது அருந்தியுள்ளார். மது போதையில் ஹரிஹரன் கோவை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலின் இன்ஜின் பகுதியில் ஏறினார். இதனை கண்ட ரயில்வே அதிகாரிகள் ஹரிஹரனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
The post கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு ரயில் மீது ஏறி 25 ஆயிரம் வாட்ஸ் மின் கம்பியை பிடிக்க முயன்ற வாலிபர் appeared first on Dinakaran.