×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களாவில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், கனராஜின் மனைவி, மைத்துனர், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட இதுவரை 316 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான போலீசார், சிறப்பு வழக்கறிஞர்கள் மற்றும் கனகராஜ் ஆஜனர். குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். புலன் விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் தேவை என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை வருகின்ற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி லிங்கம் உத்தரவிட்டார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Ooty ,Jayalalithaa ,Sasikala ,Kotagiri, Nilgiri district ,Dinakaran ,
× RELATED கொடநாடு கொலை வழக்கு எதிர்தரப்பு...