பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியல் இனத்தவர்களை தாக்கிய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மேலும் 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கர்நாடக அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2014-ல் கொப்பல் மாவட்டம் மரகும்பி கிராமத்தில் சினிமா டிக்கெட் தொடர்பான தகராறில் பட்டியல் இனத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. பட்டியல் இனத்தவர்களின் வீடுகளை தீவைத்து எரித்து அவர்களை தாக்கியதாக 117 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே 11 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். சிறுவர்கள் 2 பேர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் எஞ்சியவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.
The post கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.