×

டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம்

கான்பெர்ரா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியது. 2018-ல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தலைமை பொறுப்பு வகிக்க டேவிட் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பால் தலைமை பொறுப்பை டேவிட் வார்னர் ஏற்க தடை எதுவும் இல்லை. தடை நீங்கியதால் பிக்பாஸ் லீக்கின் சிட்னி தண்டர் அணிக்கு தலைமை பொறுப்பை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post டேவிட் வார்னர் மீதான வாழ்நாள் தடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : David Warner ,Canberra ,Overseas Cricket Board ,Australian Cricket Board ,Dinakaran ,
× RELATED கத்தார் ஓபன் டென்னிஸ் நம்பர்-1 வீராங்கனை சபலென்கா விலகல்