- யூனியன் அரசு
- மக்களவை
- ராம்தாஸ்
- பமாகோ
- திண்டிவனத்தில்
- பாமகா
- ராமதாஸ்
- தைலாபுரம் எஸ்டேட்
- FL 2
- பாமா
- தின மலர்
திண்டிவனம், அக். 25: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், மூடப்பட்ட மதுக்கடைகள் 500 ஆக இருந்தாலும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 600 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளது. FL2 என்ற பெயரில் அரசின் உரிமம் பெற்றால் யார் வேண்டு மென்றாலும் மது விற்பனை செய்யலாம். தீபாவளிக்கு முன்னும் பின்னும் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூடவேண்டும். 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தொகுதியை குறைத்தால் ஒன்றிய அரசிடம் போராட வேண்டும். தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு முறை இப்போது உள்ளபடியே இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது புதிய ஊழலுக்கு வழிவகுக்கும். ஒரு தனியார் பேருந்து நாளொன்றுக்கு 600 கி.மீ. செல்லும் பேருந்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.51.25 வாடகை தனியாருக்கு அரசு தரவேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டபோதிலும் 17 முதல் 30 மாதங்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை.
முதல்வர் தலையிட்டு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். 7ம் ஊதிய குழு பரிந்துரையின் படி ஊதிய உயர்வு வழங்கப்பட்ட போதிலும் அவர்களின் ஒரு பிரிவினருக்கு 17 மாதங்களும் மற்றொரு பிரிவினருக்கு 30 மாதங்களும் ஊதிய உயர்வில் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழங்கப்பட வேண்டும். வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட மருதுபாண்டியர்களின் 223ம் ஆண்டு நினைவு நாளை போற்றுவோம், என்றார்.
The post மக்களவை தொகுதியை குறைத்தால் ஒன்றிய அரசிடம் போராட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.