- குள்ளன்குறிச்சி
- துவரங்குறிச்சி
- திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வி.ஏ.ஓ
- நத்தம் துவரங்குறிச்சி சர்வீஸ் ரோடு
- துவரங்குறிச்சி
- தின மலர்
துவரங்குறிச்சி, அக்.25: துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி விஏஓ மற்றும் அவரது உதவியாளருக்கு நத்தம் துவரங்குறிச்சி சர்வீஸ் சாலையில் கிராவல் மணல் கொட்டுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிவகங்கை மாவட்டம் தர்மபட்டி பெரிய தேனாம்பட்டியைச் சேர்ந்த சாத்தான் மகன் சின்ராஜ் 26 என்பவர் நேற்று மதுரை- திருச்சி சர்வீஸ் சாலையில் தனியார் பேக்கரி அருகில் அனுமதியின்றி சின்ராஜ் கிராவல் மணல் டிராக்டரில் அள்ளி வந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மணல் அள்ள பயன்படுத்திய பதிவு எண் இல்லாத டிராக்டர் மற்றும் கிராவல் மணலுடன் டிப்பரை பறிமுதல் செய்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
The post துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.