- திருவிடாய்மராத்தூர்
- 69-சாத்தனூர் கிராமம்
- தமிழ்நாடு நீர்
- வள நில அபிவிருத்தி திட்டம்
- திருவிதையமுரத்தூர் மாவட்டம்
- நெல்
- சாகுபடி வயல்
- நெல் வயல்
- திருவிடைமரத்தூர்
திருவிடைமருதூர், அக்.25: திருவிடைமருதூர் அருகே 69-சாத்தனூர் கிராமத்தில் நெல் சாகுபடி வயல் வெளிப்பள்ளி குறித்த தொழில் நுட்ப பயிற்சி நடைபெற்றது. திருவிடைமருதூர் வட்டாரம், 69-சாத்தனூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நெல் சாகுபடி வயல் வெளிப்பள்ளி குறித்த தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) ராஜதுரை தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், நெல் சாகுபடியில் விவசாயிகள் அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
நெல்பயிர் சாகுபடி செய்ய 2 செ.மீ முதல் 5 செ.மீ அளவுவரை வயலில் நீர் பாசனம்போது மானது. நெல் சாகுபடியில் பாசி அதிகமாக காணப்படும் வயல்களில் காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறையில் நெல் சாகுபடியில் விவசாயிகள் அனைவரும் வயல் சூழல் ஆய்வு செய்து விகிதாச்சார அடிப்படையில் நன்மை செய்யும் பூச்சி க்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிக்கள் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து துணை வேளாண்மை அலுவலர் சுந்தரேஸ்வரன், ஒருங்கிணைந்த உயிர் உரம் மற்றும் அங்கக வேளாண்மை தொழில்நுட்பமும், மண் பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் சமதகினி, மண் பரிசோதனை மற்றும் மண்வள மேம்பாடு குறித்த தொழில்நுட்பமும், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சக்கரவர்த்தி, ஒருங்கிணைந்த நுண்ணூட்ட மேலாண்மை தொழில்நுட்பமும் தெரிவித்தனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சாத்தாவு செய்திருந்தார்.
The post திருவிடைமருதூர் அருகே நெல் வயல்வெளி தொழில் நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.