×

சிக்னல் கோளாறு ரயில் சேவை பாதிப்பு

தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கொருக்குப்பேட்டை வழியாக மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இருந்து சென்னை வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்த ரயில்களில் வந்த பயணிகள் நடுவழியில் கீழே இறங்கி நடந்தும், ஆட்டோவிலும் சென்றனர். ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்து, சிக்னல் கோளாறை சரி செய்தனர். அதை தொடர்ந்து, 2 மணி நேரத்திற்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்டன.

The post சிக்னல் கோளாறு ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Chennai Central Railway Station ,Korukuppet ,Basin Bridge railway station ,Kummidipoondi ,Chennai ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்