×

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கு கெஜ்ரிவால் பிரசாரம்

புதுடெல்லி: பாஜவுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகள்- உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா(யூபிடி) மற்றும் சரத் பவாரின் என்சிபி(எஸ்பி) வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஜார்க்கண்டில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

The post மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கு கெஜ்ரிவால் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,India ,Maharashtra ,Jharkhand ,New Delhi ,Aam Aadmi Party ,Congress ,BJP ,Arvind Kejriwal ,
× RELATED கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று...