புதுடெல்லி: இந்த ஆண்டு தீபாவளி, சாத் பூஜையையொட்டி, தினசரி 2 லட்சம் கூடுதல் பயணிகள் பயணிக்க வசதியாக, 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். குறிப்பாக இப்பண்டிகை காலத்தில் நாட்டின் கிழக்கு பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் பயணம் செய்வதால் வடக்கு ரயில்வே சுமார் 3,050 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வடக்கு ரயில்வே 1,082 சிறப்பு ரயில்களை இயக்கியது. இம்முறை 181 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
The post தீபாவளி, சாத் பூஜைக்கு 7,000 சிறப்பு ரயில்கள் appeared first on Dinakaran.