×

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. விருது ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும்.முதல்வரால் 26.01.2025 குடியரசு தினத்தன்று இந்த விருது வழங்கப்படும். அண்ணா பதக்கம் விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 15 என அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Chief Minister ,Republic Day ,
× RELATED கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்பட...