×
Saravana Stores

நெல்லை பல்கலைக்கழகத்தில் ஏவிபி மாநில தலைவருக்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி: ஆளுநரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட்டிற்கு வேந்தர் என்ற முறையில் 3 நபர்களை ஆளுநர் உறுப்பினர்களாக நியமிக்க முடியும். இதில் ஆர்எஸ்எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் மாநில தலைவர் சவிதா, சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை கண்டித்தும், அவரது நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை பல்கலைக்கழகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவர் சங்க மாநில தலைவர் சம்சீர் அகமது, மாவட்ட செயலாளர் சைலஸ் அருள்ராஜ் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாணவர் அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘கவர்னர் தனது அதிகாரத்தின் மூலம் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்த நபர்களை பல்கலைக்கழகங்களில் நியமித்திருப்பது கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் ஆர்எஸ்எஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சட்டத்துக்கு புறம்பானது. கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். சார்புள்ளவர்களை நியமிக்க ஆளுநர் ஆரிப்கான் முயன்றபோது நீதிமன்றம் தலையிட்டு தடை செய்தது. அதிலிருந்து கூட தமிழ்நாடு ஆளுநர் பாடம் கற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக உயர்கல்வித்துறையில் முடிவு எடுப்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கம் அனுமதிக்க கூடாது. இந்த நியமனத்தை திரும்ப பெற வேண்டும்’ என்றனர்.

The post நெல்லை பல்கலைக்கழகத்தில் ஏவிபி மாநில தலைவருக்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி: ஆளுநரை கண்டித்து மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : AVP ,Nellai University ,Nellie ,Manonmaniam ,Sundaranar University ,Savita ,ABVP ,RSS ,Nellie University ,Dinakaran ,
× RELATED நெல்லை அருகே சுத்தமல்லியில் டாஸ்மாக் கடை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை