×
Saravana Stores

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை


கோபி: தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் அணைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ளது கொடிவேரி அணை. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும். இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கொடிவேரி அணை பகுதி பவானி ஆற்றில் இன்று காலை 150 கனஅடியிலிருந்து நீர்வரத்து 860 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறி வருகிறது.

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வர நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். மேலும் பவானி ஆற்றில் துணி துவைத்தல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும், பரிசல் இயக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கொடிவேரி அணை வெறிச்சோடி காணப்பட்டது.

The post தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kodiveri Dam ,Kopi ,Kobi ,Erode district, Kobi ,Bhavani River ,Dinakaran ,
× RELATED நீர் வரத்து அதிகரிப்பு: கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை