சென்னை SPARROW செயலியை காவல்துறை தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு A & B அதிகாரிகள்) வருடாந்திர இரகசிய அறிக்கை (ACR) அல்லது வருடாந்திர செயல்திறன் மதீப்பீட்டு அறிக்கையானது (APAR) இதுவரை காகிதவடிவில் தயாரித்து, செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த வருடாந்திர இரகசிய அறிக்கையானது காவல் அதிகாரிகள் தங்கள் பணிகாலத்தில் பல்வேறு நிர்வாக செயல்முறைகளான பதவி உயர்வு. அயல்பணி, பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்குவதற்கான பரிந்துரைகள் மற்றும் பணியிடமாறுதல்கள் ஆகியவற்றிற்கு முக்கிய பங்குவகிக்கின்றது.
வருடாந்திர இரகசிய அறிக்கையை காகிதவடிவில் பெறப்படுவதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்ற காரணத்தினால் காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அவர்களால் மேற்கண்ட வருடாந்திர இரகசிய அறிக்கையை இணையவழி வாயிலாக செயல்படுத்த மாண்புமிகு தழிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மூலம் கவனத்திற்கு எடுத்துச் சென்றதின் பேரில் முதலமைச்சர் இதற்கு முழுமையாக ஒப்புதல் அளித்து கடந்த 2022-2023 ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் காவல் கண்காணிப்பாளர்கள் வரை வருடாந்திர இரகசிய அறிக்கையை SPARROW செயலி மூலம் உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கி பல்வேறு அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த SPARROW செயலியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்களால் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடாந்திர இரகசிய அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை மற்றும் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) இணைந்து SPARROW என்ற செயலி மூலம் வடிவமைத்து, உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் காவல் கண்காணிப்பாளர்கள் (IPS அல்லாத அதிகாரிகள்) வரை சுமார் 13,000 பயனாளிகளுக்கு நடைமுறைப்படுத்த இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
SPARROW செயலியை வடிவமைத்தவர்கள் கூறுகையில், இச்செயலி தமிழ்நாடு காவல்துறையில் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும். பராமரிக்கப்படும் விரிவான செயல்திறன் மற்றும் சுயமதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையாக கொண்டது. இந்த அமைப்பின் நோக்கமானது காவல் அதிகாரிகள் தங்கள் வருடாந்திர இரகசிய அறிக்கையை எளிதாக இனையவழி மூலம் நிரப்புவதற்கும் மற்றும் சமர்ப்பிப்பதற்கும். மேலும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கும். அவர்களின் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நிரப்புவதற்கு அனுமதிக்கும் வகையிலும் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வருடாந்திர இரகசிய மதிப்பீட்டு அறிக்கையை உயர் அதிகாரிகள் பணிமாறுதலாகி சென்று இருந்தாலும், அயல்பணியில் இருந்தாலும், நீண்ட விடுப்பில் இருந்தாலும் அவர்கள் SPARROW செயலியில் தங்களுடைய உள் நுழைவுச் சான்று மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி உள் நுழைந்து எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் செயல்படுத்தி எளிதாக முடிக்கலாம். இந்த வருடாந்திர இரகசிய அறிக்கையானது காணாமல் போவதற்கோ அல்லது இடம்மாறி செல்வதற்கு உண்டான சாத்தியக் கூறுகள் இல்லை. காவல் அதிகாரிகள் (காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் IPS அல்லாத காவல் கண்காணிப்பாளர்கள் வரை) தங்களது வருடாந்திர இரகசிய அறிக்கையை SPARROW செயலியை பயன்படுத்தி எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பார்வையிடுதல் மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த SPARROW செயலியின் பாதுகாவலரான / பொறுப்பாளரான (CUSTODIAN) நிர்வாக அதிகாரி, காவல் அதிகாரிகளின் வருடாந்திர இரகசிய அறிக்கையை பார்வையிடலாம். மேலும் வேண்டுகோளுக்கிணங்க இடமாற்றம், அயல்பணி. பதக்கம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றிற்காக பரிந்துரை செய்ய காவல் அதிகாரிகளுடைய வருடாந்திர இரகசிய அறிக்கையை பார்வையிட உயர் அதிகாரிகளுக்கு மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கு பகிரலாம். இந்த SPARROW செயலி மூலம் வருடாந்திர இரகசிய மதிப்பீட்டு அறிக்கையை இணையவழி மூலம் உருவாக்குவது மிகவும் பாதுகாப்பானது.
மேலும் இந்த அறிக்கைகள் சேதம் ஆகாமலும் அழியாமலும் பாதுகாப்பாக இருக்கும். இதுபோன்றதொரு முயற்சி நாடு முழுவதும் உள்ள IPS அல்லாத அதிகாரிகளுக்கு வருடாந்திர இரகசிய அறிக்கையை மின்னணு முறையில் உருவாக்கி செயலாக்குவது காவல்துறையில் இதுவே முதல் முறையாகும். இந்த SPARROW செயலியை அனைத்து மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகளுக்கும் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கும் திறம்பட செயலாற்ற எளிய முறையில் தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் அலுவலக பிரிவு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடாந்திர இரகசிய மதிப்பீட்டு அறிக்கையினை SPARROW செயலி மூலம் இனிவரும் காலங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
The post SPARROW செயலியை தொடங்கி வைத்தார் காவல்துறை தலைமை இயக்குநர் appeared first on Dinakaran.