×

சிந்து சமவெளி நாகரிகத்தை படமாக்கும் ராஜமவுலி

ஐதராபாத்: சிந்து சமவெளி நாகரிகத்தை படமாக்கும் திட்டம் உள்ளது என்றார் இயக்குனர் ராஜமவுலி. சரித்திர படங்களை இயக்குவதில் ராஜமவுலி கைதேர்ந்தவர் என்பதால், அவருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் வாயிலாக யோசனை ஒன்றை கூறியுள்ளார். டிவிட்டரில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருந்த ஆனந்த் மஹிந்திரா, வரலாற்றை உயிர்ப்பிக்கும் மற்றும் நம் கற்பனையைத் தூண்டும் அற்புதமான எடுத்துக்காட்டுகள் இவை என குறிப்பிட்டதோடு, இந்த பழங்கால நாகரிகத்தைப் பற்றி இயக்குனர் ராஜமவுலி படம் எடுத்தால், அது உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என ஐடியா கொடுத்திருந்தார்.

இதற்கு இயக்குனர் ராஜமவுலியும் ரிப்ளை செய்துள்ளார். அதில் அவர், ‘ஆமாம் சார், தோலாவிராவில் மகதீரா பட ஷூட்டிங்கிற்கு சென்றபோது, பழமையான ஒரு மரம் ஒன்றைப் பார்த்தேன், அது சிதைந்துபோய் இருந்தது. சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரத்தின் மூலம் விவரிக்கும்படியான ஒரு படத்தை எடுக்கும் ஐடியா தோன்றியது. அதன்பின் பாகிஸ்தானுக்கு சென்றபோது, மொஹஞ்சதாரோவுக்கு செல்ல மிகவும் முயற்சி செய்தேன். துரதிர்ஷ்டவசமாக, அனுமதி மறுக்கப்பட்டது’ என கண்ணீர் சிந்தும் எமோஜி உடன் பதிவிட்டுள்ளார் ராஜமவுலி.

The post சிந்து சமவெளி நாகரிகத்தை படமாக்கும் ராஜமவுலி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajamavuli ,Plains ,rajamouli ,Anand Mahindra ,president ,Mahindra ,Twitter ,Rajamauli ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி