×

“கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வாரியம் இருக்க வேண்டும்” : ஐகோர்ட்

மதுரை : இந்து சமய அறநிலையத்துறை, வஃக்பு வாரியம் போல கிறிஸ்தவ நிறுவனங்களை ஒழுங்குமுறை செய்ய சட்டப்பூர்வ வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தாளாளர் நியமனம் தொடர்பான வழக்கில் நீதிபதி சதீஷ்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “கிறிஸ்தவ நிறுவனங்கள் கல்வி, மருத்துவம் போன்ற பல பொதுச்சேவைகளை மேற்கொள்கிறது என்பதை மறந்துவிட முடியாது. அந்நிறுவனங்களின் சொத்துகள், நிதி பாதுகாக்கப்பட வேண்டும். இதை ஒழுங்கமைக்க ஒரு சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும்,”இவ்வாறு குறிப்பிட்டார்.

The post “கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வாரியம் இருக்க வேண்டும்” : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Christian ,ICourt ,Madurai ,Madurai High Court ,Hindu Religious Endowment Department ,Waqf Board ,Scott Christian College ,Nagercoil… ,Dinakaran ,
× RELATED கிறிஸ்தவ அமைப்புகளை கட்டுப்படுத்த சட்டம் தேவை: ஐகோர்ட் கிளை