×
Saravana Stores

பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி!!

டெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் உள்ள 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தபோது பெங்களூருவில் இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 20 பேர் மீட்கப்பட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது.

இதையடுத்து கட்டிட விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மகன் மோகன், ஒப்பந்ததாரர் முனியப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெங்களூரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்; பெங்களூருவில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் வேதனையடைந்தேன். என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-யும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : Bangalore Apartment Accident ,PM Modi ,Delhi ,Babusab Palaya ,Bangalore, Karnataka ,Bangalore ,Bangalore Apartment ,
× RELATED நாட்டின் இளைஞர்களுக்கு அதிகபட்ச...