- பிரதமர் மோடி
- தில்லி
- பிரிக்ஸ் மாநாடு
- புது தில்லி
- பிரேசில்
- ரஷ்யா
- இந்தியா
- சீனா
- தென் ஆப்பிரிக்கா
- பிரிக்ஸ்
- தின மலர்
புதுடெல்லி: கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி பிரிக் அமைப்பு தொடங்கப்பட்டது. முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உறுப்பினராக இருந்தன. ஓராண்டுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா இணைந்தது. இதன் பிறகு இந்த அமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்பட்டது. கடந்தாண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இணைந்தன.
இந்த சூழ்நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் கசான் நகரில் நடந்தது. ‘உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சர்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் கலந்துரையாடினர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில், சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில். முதிர்ச்சி மற்றும் விவேகத்துடன் பரஸ்பர மரியாதை காட்டுவதன் மூலம் இந்தியாவும் சீனாவும் அமைதியான மற்றும் நிலையான உறவை பெற முடியும்.
எல்லையில் அமைதியை மீட்டெடுப்பது, இருதரப்பு உறவை இயல்பாக்குவதற்கான பாதையை நோக்கி நகரத்தும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் தகவல் தொடர்புகளை மேம்படுத்தி, சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். 5 ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பிரிக்ஸ் மாநாட்டை முடித்து கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
The post பிரிக்ஸ் மாநாட்டை முடித்து கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.