- தீபாவளி
- அமைச்சர்
- பெரியகாரப்பன்
- சென்னை
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- தீபாவளி விழா
- கே. ஆர். பெரியாகரப்பன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெரியகரப்பன்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (27.10.2024) செயல்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (24.10.2024) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழ்நாடு முழுவரும் செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக்கடைகள், 10,164 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக்கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (27.10.2024) அன்று முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை செயல்படும்: அமைச்சர் பெரியகருப்பன்! appeared first on Dinakaran.