- செங்கல்பட்டு
- பச்சை தீபாவளி
- தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு
- மனித உரிமைகள் மற்றும் நலன்புரி
- செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
- செங்கல்பட்டு நகராட்சி மங்கல்பட்டு
- செங்கல்பட்டு
தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பு, மனித உரிமைகள் மற்றும் நலன்புரி அறக்கட்டளை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய மற்றும் செங்கல்பட்டு நகராட்சி இணைந்து நடத்தும் 2024 பசுமை தீபாவளி குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு தமிழ்நாடு ஒருங்கிணைப்பு கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர் சிறப்புரையாற்றினார்.
காற்று மாசு 125 டெசிமலுக்கு மேல் ஒளி மாசு உண்டாக்கும் பட்டாசுகளை புறகணிப்போம், போரிய தாது படிந்த பச்சை நிறத்தில் ஒளிரும் பட்டாசுகளை தவிர்ப்போம், பட்டாசு கழிவுகளை தரம்பிரித்து வீடு தேடி வரும் நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திடுவோம், சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்ப்போம், பசுமை பட்டாசுகளை உபயோகித்து தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடுவோம், நாளைய சமூதாயத்திற்க்கு மாசில்லா உலகை அமைப்போம், பசுமை மரகன்றுகளை நடுவோம் பட்டாசுகளை தமிழக அரசு நிர்ணயித்த கால அளவான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வெடிப்போம் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் மேலும் பிளாஸ்டி பை தவிர்க்க வேண்டும் அனைவரும் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கினர்
இந்த நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர் திருமூர்த்தி, செங்கல்பட்டு அரசு மருத்துவர் மோகன், செங்கல்பட்டு பி.எஸ்.என், எல் கோட்ட மேலாளர் ரமாமணி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
The post பசுமை தீபாவளி கொண்டாட செங்கல்பட்டில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் appeared first on Dinakaran.