×
Saravana Stores

தரங்கம்பாடியில் பழமை மாறாமல் ரூ.3.63 கோடியில் டேனிஷ்கோட்டை புதுப்பிக்கும் பணி மும்முரம்

Dharangapadi, DanishFort, Renovationசெம்பனார்கோயில் : தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை பழமைமாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள கடற்கரையோரம் 36,410 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய வரலாற்று புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை உள்ளது.

இது 1620ம் ஆண்டு டேனிஷ் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோட்டை தஞ்சையை ஆண்ட மன்னர் ரெகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு 1620ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோட்டை டேனிஷ்காரர்களின் இரண்டாவது பெரிய கோட்டை ஆகும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டுக்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் டேனிஷ் கோட்டையை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோட்டை அண்மை காலத்தில், இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு டேனிஷ் மன்னர் குடும்பத்தினர் உதவியுடன் மாநில தொல்லியல்துறை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது. அடுத்து 2011ம் ஆண்டு தமிழக சுற்றுலாத்துறை மூலம் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை ரூ.3 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டிலும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை சுற்றுலா பயணிகளும், அப்பகுதி மக்களும் ஆர்வமுடன் பார்த்துச்செல்கின்றனர்.

The post தரங்கம்பாடியில் பழமை மாறாமல் ரூ.3.63 கோடியில் டேனிஷ்கோட்டை புதுப்பிக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tharangambadi ,Sembanarkoil ,Tharangambadi Danish Fort ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கத்தால் கருகும் அபாயம் நிலக்கடலை செடிகளுக்கு சொட்டுநீர்