சேலம், அக்.24: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது: தர்மபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி ஊராட்சியை இணைக்க திமுக அரசு தற்போது ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது. இலக்கியம்பட்டி ஊராட்சியில் 20ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊராட்சியை தர்மபுரி நகராட்சியுடன் இணைப்பதால் இந்த ஊராட்சியை சேர்ந்த மக்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் நலத்திட்டகளை இழப்பதுடன், பல்வேறு கட்டண உயர்வுகளையும் இப்பகுதி மக்கள் சந்திக்க நேரிடும்.எனவே இலக்கியம்பட்டி ஊராட்சியை தர்மபுரி நகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் வரும் 25ம்தேதி (நாளை) காலை 10 மணிக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் நிர்வாகிகள், ெதாண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தர்மபுரியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.