×

தற்காலிக ஆசிரியரல்லாத பணியாளர் 1231 பேருக்கு டிசம்பர் வரை சம்பளம் தமிழக அரசு உத்தரவு

வேலூர், அக்.24: அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் 1231 பேருக்கு வரும் டிசம்பர் வரை 3 மாதங்களுக்கான சம்பளம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 500க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட 998 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலா ஒரு தூய்மை பணியாளர் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். அதேபோல் 500க்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட 996 அரசு உயர்நிலைபள்ளிகளில் தலா ஒரு தூய்மை பணியாளர், 1005 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலா ஒரு தூய்மை பணியாளர், ஒரு இரவுக்காவலர் என மொத்தம் 2999 தூய்மை பணியாளர்கள், இரவு காவலர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் பணி ஓய்வு பெற்றவர்கள் தவிர தற்போது பணியில் உள்ள 1231 தற்காலிக பணியாளர்களுக்கு அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வரும் டிசம்பர் வரை 3 மாதங்கள் தொடர்ந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள், சார்நிலை கருவூல அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post தற்காலிக ஆசிரியரல்லாத பணியாளர் 1231 பேருக்கு டிசம்பர் வரை சம்பளம் தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Vellore ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை...