×
Saravana Stores

சென்னையில் உள்ள 75% வீடுகளின் நீரில் ஈ.கோலி பாக்டீரியா: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னையில் உள்ள 75 சதவீத வீடுகளின் தண்ணீரில் ‘’ஈ.கோலி’’ பாக்டீரியா மாசு கலந்திருப்பதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் ‘மக்கள் நீர் தரவு முன்முயற்சியின்’ ஒரு பகுதியாக சென்னையில் 752 வீடுகளில் நீர் ஆதாரங்களை சேகரித்தனர். அதாவது, வீடுகளில் குடிநீர் குழாய்கள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்தனர். அந்த மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆயிவில் ‘’ஈ.கோலி’’ என்ற பாக்டீரியா மாசு கலந்திருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

இந்த வகையான பாக்டீரியா வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்துவதோடு, அடிக்கடி நோய்வாய்ப்பட வைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது தண்ணீர் குழாய்கள், தண்ணீரை சேகரித்து வைக்கும் தொட்டிகள், கொள்கலன்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஏதோ நேரடியாக குழாய் வாயிலாக, ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் வாயிலாக கிடைக்கும் தண்ணீரில் இருந்து மட்டும் இந்த பாக்டீரியா மாசு இருப்பதாக நினைப்பது தவறு. நீர் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தும் சில வீடுகளிலும் இந்த பாக்டீரியா மாசு இருந்தது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

மாதிரிகள் எடுக்கப்பட்டதில், பாக்டீரியா மாசு இருப்பதாக கண்டறியப்பட்ட 75% வீடுகளில் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் இருப்பதும், அவர்களும் இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதும் இந்த ஆய்வில் தெரிய வந்ததாக சென்னை ஐ.ஐ.டி.யின் நீர்த்தர திட்டத்தின் பாட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் தெரிவித்தார். மேலும் அவர், இது போல பாக்டீரியா மாசு வராமல் இருக்க நீர் சுத்திகரிப்பு தயாரிப்பாளர்கள் வழங்கும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், தண்ணீரை ஒரு நிமிடம் கொதிக்க வைத்து பின்னர் குடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

The post சென்னையில் உள்ள 75% வீடுகளின் நீரில் ஈ.கோலி பாக்டீரியா: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,Chennai ,I.I.T. ,People's Water Data Initiative ,
× RELATED சென்னை ஐ.ஐ.டி.யில் விமான பாதுகாப்பு படிப்பு அறிமுகம்