- ஒலிம்பிக் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி
- ராமநாதபுரம் சென்னை
- ராமநாதபுரம் மாவட்டம் பிரபன்வால
- தமிழ்நாடு அரசு
- ராமநாதபுரம்
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ.42 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. படகு நிறுத்தும் இடம், உடற்பயிற்சி கூடம், யோகா மையம், தங்கும் அறை, உணவுக் கூடம் ஆகியவை அமைய உள்ளது. பாய்மரப்படகு, மாரத்தான் நீச்சல் உள்ளிட்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கிய நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post ராமநாதபுரத்தில் ரூ.42 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி appeared first on Dinakaran.