- உத்தவ் தாக்கரே
- சிவசேனா
- சஞ்சய் ராவத்
- மும்பை
- அகில இந்திய கூட்டணி
- மராத்தா சட்டமன்றத் தேர்தல்கள்
- பி.ஜே.பி கூட்டணி
- மகாராஷ்டிரா
- மகாராஷ்டிரா-இந்தியா கூட்டணி
- உத்தவ் தாக்கரே சிவசேனா
- தின மலர்
மும்பை: மராட்டிய சட்ட மன்ற தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து இருக்கிறார். மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நேற்று இரவே முடிந்து விட்டதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்கள் இன்று மாலை வெளியாகும் என்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 104 தொகுதிகள், உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 96 தொகுதிகள் மற்றும் சரத்பவார் தேசியவாத காங்கிரசுக்கு 88 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
The post மராட்டியம் – இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு: உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தகவல் appeared first on Dinakaran.