×
Saravana Stores

மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் : ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி

மதுரை :எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் தேங்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் முறையான கழிவுநீர் கால்வாய்கள், போதிய அளவில் கழிப்பறைகள் அமைக்க உத்தரவிடக்கோரியும் மதுரையைச் சேர்ந்த வெரோணிக்காமேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கினையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்றக்கிளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,”தாழ்வான பகுதி என்பதால் மருத்துவமனையில் தண்ணீர் தேங்கி உள்ளத. அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, “இவ்வாறு தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது. அப்படி இல்லை என்றால், மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்,”என காட்டமாக தெரிவித்தனர். மேலும் வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநர், டீன் பதிலளிக்க உத்தரவிட்டு நவ. 4-க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் : ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,High Court ,Veronica Meri ,Madurai government ,Rajaji Hospital ,
× RELATED நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: ஐகோர்ட் கிளை