×
Saravana Stores

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வழக்கு – மனு தள்ளுபடி

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மீதான புகாரை ஒன்றிய அரசு விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் இணையதள பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஹிமான்ஷு பதக்கின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்கள் திருடப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. தகவல் திருட்டு குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள்தான் புகார் அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்தான் புகாரை விசாரிக்க முடியும் எனவும் ஒன்றிய அரசு வாதிட்டது.

The post ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வழக்கு – மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Star Health Insurance Company ,Union Government ,Punjab ,Himanshu Pathak ,Star ,Dinakaran ,
× RELATED ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்...