×

வதந்திகளை பரப்புவது தான் எதிர்க்கட்சிகளின் புதிய தொழில்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு

ஹல்த்துவானி: உத்தரகாண்ட் மாநில சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், அம்மாநில வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். கடந்த 4ம் தேதி டேராடூனில் 18 ஆயிரம் கோடி மதிப்பு திட்டங்களை மோடி தொடங்கிவைத்தார். இதே போன்று நேற்று ஹல்த்துவானியில் ரூ.14,127 கோடி மதிப்பில்  17 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். ரூ.3,420 கோடி மதிப்பில் 6 திட்டங்களை தொடங்கிவைத்தார். மொத்தம் 17,500 கோடி மதிப்பில் 23 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி பேசியதாவது: தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் ஹல்த்துவானி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டு வகையான அரசியலை உத்தரகாண்ட் கண்டுள்ளது. ஒன்று மலை மாநிலத்தின் வளர்ச்சி பறிப்பு.மற்றொன்று மலை மாநிலத்தின் அனைத்து வளர்ச்சிக்கான உறுதி. உத்தரகாண்ட் மாநிலத்தை இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் இரு கைகளாலும் கொள்ளை அடித்தனர். ஆனால், எங்கள் அரசு பாதுகாக்க வந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை விரும்புவர்களுக்கு கொள்ளை அடிக்கும் எண்ணம் வராது. தற்போது எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவர்களின் உண்மையான முகத்தை மக்கள் அறிவார்கள். வதந்தி பரப்பும் புதிய தொழிலை தொடங்கியுள்ள எதிர்க்கட்சிகள், அதை உற்பத்தி செய்து பரப்பி, பின்னர் அது குறித்து அவர்களே பிரசாரம் செய்வார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் பல வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாக இருந்தார்கள். லக்வார் திட்டம் 46 ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்….

The post வதந்திகளை பரப்புவது தான் எதிர்க்கட்சிகளின் புதிய தொழில்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Haltuvani ,Utharkhand ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...