டெல்லி: தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தொழில் ஆல்கஹால் தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்க முடியாது என்று 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 8 நீதிபதிகள் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே 7 நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை மாற்றி 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பில், ஆல்கஹால் பானம் மற்றும் போதை தரும் பானம் ஆகியவை மனித நுகர்வுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் என்பது, போதை தரும் பானம் என்ற வகையில் அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையில் இடம்பெறுவது. 8வது அட்டவணை 2வது பட்டியலில் அதை முறைப்படுத்தி, அதன் மீது வரி விதிக்கவும் மாநிலங்கள் சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் மாநில அரசுகளின் உரிமையை நிலைநாட்டி தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ரிஷிகேஷ் ராய், அபய் எஸ்.ஓகா, ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர ஷர்மா, அகஸ்டின் ஜார்ஜ் உரிமையை நிலைநாட்டி தீர்ப்பு வழங்கி உள்ளனர். நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளார்.
The post தொழிலக பயன்பாட்டு ஆல்கஹால் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கே அதிகாரம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.