×

கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து வந்த கார், பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை அடுத்து கார் லாரியின் அடியில் சிக்கியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் தகவல்படி, உயிரிழந்தவர்கள் கே கே விஜேஷ் (35), ரமேஷ் (31), விஷ்ணு (30), மற்றும் முகமது அப்சல் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் அடையாளம் இன்னும் காணப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Kerala state ,Palakkad Thiruvananthapuram ,Palakkad, Kerala ,Palakkad ,Kerala ,Palakkad National Highway ,
× RELATED சொகுசு காரில் துப்பாக்கி, பயங்கர ஆயுதத்துடன் சுற்றிய 2 பேர் கைது