×

பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடிகளில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனை தொடர்ந்து, கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ஆந்திராவில் கரையை கடந்தது. அதனால் பெங்களூருவில் 3 நாட்கள் கனமழை கொட்டியது. அவை கரையை கடந்த பிறகு 2 நாட்கள் வெயிலின் தாக்கம் இருந்தது. இதனை அடுத்து மீண்டும் மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தற்போது புயலாக வழுபெற்றது.

இதன் காரணமாக, நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கனமழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டிடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 5 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

The post பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,North East ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்