×
Saravana Stores

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 8 செ.மீ. மழை பதிவு

கோவை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் – செ.மீ., நீலகிரி, திருப்பூரில் தலா – 5 செ.மீ., வேடசந்தூர், சேலத்தில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்கிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் அடித்த நிலையில் மாலை 6 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழை காரணமாக கோவை ரயில்நிலையம் சாலை, மருத்துவமனை சாலை, சுங்கம், ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. கோவை லங்கா கார்னர் ரெயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக சிவானந்தா காலனி ரயில்வே சுரங்கப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவையில் பெய்து வரும் மழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கனமழையால் காரமடை அருகே ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2 கார்கள் அடித்து வரப்பட்டன. காரில் இருந்தவர்கள் வெளியேறி உயிர்தப்பினர்.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 8 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Goa ,Dindigul ,Ce. Nilgiri ,Tiruppur ,Vedasandur, Salem ,Survey ,
× RELATED கோவையில் தேசிய அளவிலான வாகனத்...