- நீத்தார் நினைவு நாள் மாரத்தான் போட்டி
- ராஜபாளையம்
- ராஜபாளையம் போக்குவரத்து போலீசார்
- டிஎஸ்பி
- பீர்த்தி
- காந்தி சிலை
- போக்குவரத்து காவலர்
ராஜபாளையம், அக்.23: ராஜபாளையம் போக்குவரத்து காவல்துறை சார்பில் உயிர்த்தியாகம் செய்த காவலர்களின் நீத்தார் நினைவு நாள் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. காந்தி சிலை ரவுண்டானாவில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ராஜபாளையம் டிஎஸ்பி பீர்த்தி முன்னிலை வகித்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீமான் தலைமை வகித்தார். மினி மாரத்தான் போட்டியில் ராணுவ பயிற்சி அகாடமி மாணவர்கள் மற்றும் நாடார் மேல்நிலை பள்ளி மாணவர்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டி ரயில் நிலையம், பஞ்சு மார்க்கெட், நேரு சிலை, தென்காசி ரோடு வழியாக 2.5 கிமீ. சுற்றி வந்து காந்தி சிலை ரவுண்டானா வந்து நிறைவு பெற்றது. இதில் முதல் பரிசு பெல்ஜின், இரண்டாவது பரிசு வினோத், மூன்றாவது பரிசு ராகவேந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மூவரும் ராணுவ பயிற்சி அகடாமி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ராஜபாளையத்தில் நீத்தார் நினைவுநாள் மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.