ராமநாதபுரம், அக்.23: ராமநாதபுரம் முதல் ஆர்.காவனூர் வரை நான்கு வழிச்சாலை பகுதிகளில் 5000 பனை விதைகளை நெடுஞ்சாலை துறையினர் நடவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளின் ஓரங்களில் பனை விதைகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ராமநாதபுரம் முதல் ஆர்.காவனூர் வரை நான்கு வழிச்சாலை விரிவு படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையின் இருபுறங்களிலும் ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன் முன்னிலையில் பனை விதைகளை நடவு செய்தனர். மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு விதமான நிழல் தரும் மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டது.
The post நான்கு வழிச்சாலையோரம் 5 ஆயிரம் பனை விதைகள் நடவு appeared first on Dinakaran.