மதுரை, அக். 23: மதுரையில் நாளை சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது. சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதேபோல், கல்வி உதவித்தொகை, திருமணம் மற்றும் மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி செலவுத் தொகை ஈடுசெய்தல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இவற்றை பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த 18 முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளோர், அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்புசாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர், தங்கள் உறுப்பினர் பதிவினை புதுப்பித்துகொள்ளவும், புதுப்பித்தல் தவறிய உறுப்பினர்களை மீண்டும் வாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்து கொள்ளலாம். புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுவது தொடர்பாக நாளை (அக்.24) 11 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
The post மதுரையில் நாளை சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.