×
Saravana Stores

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்: வேளாண் இணை இயக்குநர் தகவல்

 

மதுரை, அக். 23: மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, வேளாண்துறை இணை இயக்குநர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்தை பொருத்த வரையில் திருமங்கலம், கள்ளிக்குடி, சேடப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் தற்போது படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது.

இதனால் விவசாயிகள் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்காமல் கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பயிர்களில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறியுடன், ஒரு விளக்கு பொறியை அமைக்க வேண்டும். ஊடு பயிராக பூக்கும் தாவரங்களையும், பயறு வகை பயிர்களையும் சாகுபடி செய்ய வேண்டும்.

மேலும் மெட்டாரைசிம் அனி சோபிலே என்ற மருந்தை ஒரு கிலோவுக்கு 3 கிராம் என்ற அளவில், விதைப்பிறகு பின்பு 15 முதல் 25 நாட்களிலும், பின்னர் தொடர்ந்து 10 நாட்கள் இடைவெளியிலும் தௌிக்க வேண்டும். பயிரின் வயது 30 நாட்கள் இருக்கும் போது, மணல் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை 9:1 என்ற அளவில் கலந்து இலை இடுக்குகளில் இடுவது அவசியம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்: வேளாண் இணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Associate Director of ,Madurai ,Joint Director ,Agriculture ,District ,Subbaraj ,Dinakaran ,
× RELATED விளம்பர நோக்கில் பிரசவ வீடியோ...